டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பியூனைப் போல் நடத்தப்படுகிறார் என ராஜ்யசபாவில் சமாஜ்வாதி கட்சி எம்.பி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. டெல்லி அரசின் அதிகாரம் குறித்து துணை நிலை ஆளுநருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர்.
சமாஜ்வாதி எம்.பி நரேஷ் அகர்வால் தெரிவிக்கையில், "ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகாரங்கள் மறுக்கப்படுகிறது. மேலும், ஆளுநர் கெஜ்ரிவாலை ஒரு பியூனைப் போல் நடத்துகிறார். இது ஒரு முதல்வருக்கு நடந்த அவமரியாதை" என அவர் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.