ராணுவத்தில் உயிரிழப்பு சாதாரணமானது தான்: பா.ஜ.க எம்.பியின் சர்ச்சைக்குரிய பேச்சு

  முத்துமாரி   | Last Modified : 02 Jan, 2018 01:51 pm


இந்திய ராணுவத்தில் உயிரிழப்பு என்பது ஒரு சாதாரணமானது தான் என பா.ஜ.க எம்.பி ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சமீபத்தில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 5 வீரர்கள் மரணமடைந்தனர். இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நேபால் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர்,  'இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவம் சாதாரணமானது தான். 

ஒரு கிராமத்தில் சண்டை நடந்தாலே பலருக்கு காயம் ஏற்படுகிறது. எந்த நாட்டில் தான் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் அல்லது அவர்களை தாக்கும் குண்டுகளை செயலிழக்க செய்யும் கருவி ஏதேனும் உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதை பயன்படுத்தி ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றலாம்' என பேசியுள்ளார். 

இதனையடுத்து எம்.பியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. இதுகுறித்து பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேபால் சிங், தான் கூறியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் தங்களை காத்துக்கொள்ள விஞ்ஞானிகள் புதிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என அர்த்தத்தில் தான் நான் கூறினேன் என விளக்கமளித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close