தேதி குறிப்பிடாமல் மக்களைவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்!

  முத்துமாரி   | Last Modified : 05 Jan, 2018 03:48 pm


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, டிச 15ல் தொடங்கி நடந்து வந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால் தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவை, மக்களவை இரண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றதாகவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி அவையில் விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும் நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்ட மசோதா, நீதிபதிகளின் சம்பள உயர்வு உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close