கம்யூனிஸ்டுக்கு டிப்ஸ் கொடுத்த ராகுல் காந்தி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 06 Jan, 2018 02:35 pm

சீனாவில் ஆளும்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஷை ஜின்பிங் அதிபராக உள்ளார். இந்நிலையில் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள், இந்தியாவிற்கு அரசியல் சுற்றுலா பயணமாக வந்துள்ளார்கள். இந்தியாவுக்கு வந்து இங்குள்ள கள அரசியல் சூழல் மற்றும் செயல்பாடுகளை ஆராய்ந்து குறிப்பெடுத்து வருகின்றனர். இந்த பயணத்தில் பல அரசியல் தலைவர்களினை சந்தித்து கருத்து கேட்ட அவர்கள், புதிய காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட ராகுல் காந்தியையும் சந்தித்தனர்

அந்த சந்திப்பில் அரசியல் சூழல் மற்றும் சவால்கள் குறித்து அவரிடம் கேட்டறிந்தனர். இந்தநிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சீன கம்யூ., பிரதிநிதிகள் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close