பா.ஜ சதியால் லாலுவுக்கு சிறை: அகிலேஷ் யாதவ்

  SRK   | Last Modified : 07 Jan, 2018 06:48 pm


உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். 

21 வருடங்களுக்கு முன்னால்  89 லட்ச ரூபாய் ஊழல் செய்த  விவகாரத்தில் நேற்று லாலுவுக்கு 3.5 வருட சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும்  விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து இன்று பேசிய அகிலேஷ் யாதவ், லாலுவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

"பாரதிய ஜனதா செய்த சதியால் லாலுவுக்கு தண்டனை கிடைத்துள்ளது. பா.ஜ-வில் அவர் சேராமல் இருந்ததால் இவ்வாறு நடந்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைத்திருந்தால் லாலுவுக்கு இந்த நிலை வந்திருக்காது. உயர் நீதிமன்றத்தில் அவருக்கு நியாயம் கிடைக்கும்" என சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயலாளர் ராமசங்கர் வித்யார்த்தி கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close