வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பா?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 08 Jan, 2018 07:36 pm

மத்திய அரசு தனிநபருக்கான வருமான வரி செலுத்தும் உச்ச வரம்பினை அதிகப்படுத்திட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை தற்போது ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சம் வரை வருமானம் பெறக்கூடிய நபா்களுக்கு வருமான வரி கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு மேலும் உயா்த்தப்படும் என முன்பே அருண் ஜெட்லியும் கூறினார். அத்துடன் படிவம் 80 சி-யின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, வங்கி வைப்பு நிதி போன்ற முதலீடுகளின் மூலம் மேலும் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு வரி சேமிப்பு வழங்கப்படுகிறது.

 வருமான வரி உச்ச வரம்பை அதிகப்படுத்துகிற திட்டத்துடன் இதையும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தற்போது கூறப்பட்டுவருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் ஆளும் மத்திய அரசானது நடுத்தர வர்க்கத்தினரை கவர இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இன்னும் சில கண்கவர் அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு ஆச்சரியத்தை கொடுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close