மேக் இன் இந்தியாவின் 'மெகா' திட்டம் ரத்து!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 09 Jan, 2018 01:46 am

மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கோவாவில் செயல்படுத்த இருந்த கப்பல் காட்டும் பணியை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படையில் கண்ணி வெடிகள் கண்டுபிடிக்கும் கப்பல்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், கோவாவில் அதற்கான கட்டுமான பணிகள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 12 கண்ணி வெடிகளை அகற்றும் கப்பல்களைத் தயாரிப்பதற்காக, கங்னம் என்ற தென்கொரிய கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ரூ.32,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, ரூ700 கோடி செலவில் அதற்கான கட்டமைப்புகள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் அமைக்கப்பட்டன. இச்சூழலில், தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் இந்த கப்பல் கட்டும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது, என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்த அறிவிப்பை புதிதாக வெளியிட கோவா கப்பல் கட்டும் தளத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோவா மாநில முதல்வரும் முன்னாள் பாதுகாப்பு துறையின் அமைச்சருமான மனோகர் பாரிக்கர் வலியுறுத்தி வந்த இத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதால் இனி புதிய கப்பல் கட்டும் ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close