அனைத்து மாநிலங்களிலும் டிஜிட்டல் சட்டப்பேரவை!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 10 Jan, 2018 09:58 am

இந்தியாவில் உள்ள சட்ட பேரவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை தொடங்கவிருப்பதாக மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னும் காகித ஆவணங்களைக் கொண்டே சட்டபேரவை நடந்து வருகிறது. இந்நிலையில் காகிதப்பாயன்பாடு இல்லாமல் சட்டப்பேரவை முழுக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்தை பற்றி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான ஆனந்த் குமார்,  "அடுத்த 5 ஆண்டுகளில் இ-விதான்  எனும் திட்டம் மூலம் அனைத்து மாநிலச் சட்டப்பேரவைகளிலும் காகிதப் பயன்பாடு இல்லாத வகையில், டிஜிட்டம் மயம் ஆக்கப்படும். சட்டப்பேரவை நிகழ்வுகள் இதன் மூலம் வெளிப்படையானவையாக இருக்கும். இந்த திட்டம் சுற்றுப்புறச் சூழலுக்கு தீமை விளைவிக்காத பசுமைத் திட்டம். சில மாநிலங்களில் டிஜிட்டல் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில மாநிலங்களில் இன்னும் காகித பயன்பாடே அதிகமாக உள்ளது " என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close