பிச்சைக்காரன் தட்டில் திருடினார் பினராயி விஜயன்! ரமேஷ் சென்னிதாலா

  Sujatha   | Last Modified : 10 Jan, 2018 02:52 pm


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பயன்படுத்திய ஹெலிகாப்டருக்கு வாடகை, ஒக்கி புயல் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

கடந்த டிசம்பர் 26ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் திருச்சூரில் நடந்த சி.பி.எம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். இந்த ஹெலிகாப்டரின்  ஒரு நாள் வாடகை ரூ. 13 லட்சம். கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும்படி ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் பேசியதில், ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரூ.8 லட்ச ரூபாய்க்கு பில் தயார் செய்யப்பட்டு பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்டது.

இந்த பயணத்துக்கான கட்டணத்தை செலுத்தும்படி திருவனந்தபுரம் கலெக்டருக்கு ஓர் உத்தரவு கடந்த 6ம் தேதி வந்துள்ளது. எப்படி செலுத்துவது என்று யோசித்த மாவட்ட நிர்வாகம் கடைசியில் ஒக்கி புயல் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தை எடுத்து செட்டில் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால், கேரளாவே பரபரப்பானது. நிவாரண நிதியை எப்படி சொந்த விஷயத்துக்காக பயன்படுத்தலாம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த செய்தியை பினராயி விஜயன் மறுத்துள்ளார். 

இது குறித்து கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், .'முதல்வர் பினராயி விஜயனின் செயல், பிச்சைக்காரர்களின் தட்டில் இருந்து திருடியதற்கு சமம்' என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close