ஆதாருக்கு பதில் புதிய அட்டை - கடுப்பான பா.சிதம்பரம்

  Sujatha   | Last Modified : 12 Jan, 2018 06:40 am


ஆதாருக்கு பதில் புதிய அட்டை அறிமுகம் செய்ய இருக்கும் மத்திய அரசின் திட்டத்தை 'குதிரைகள் ஓடிய பிறகு லாயத்தை பூட்டு போடுவது' போன்றதாகும் என ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

மத்திய மாநில அரசு நல திட்டங்களை பெற அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஆதார் கட்டாயம் இல்லை என்று அறிவித்த போதும் மத்திய அரசு ஆதார் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. 

ஆதார் தகவல்கள் திருடப்படுகின்றன, இது பாதுகாப்பு அற்றது என பலரும் கூறிவரும் நிலையில், அதனை  உறுதிப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. 

இதன் அடிப்படையில் ஆதார் அமைப்பு, ஆதார் எண்ணுக்கு பதிலாக தற்காலிக எண் வழங்க முடிவு செய்துள்ளது. 16 எண் கொண்ட 'விர்டூவல் ஐடி' என்ற ஒன்றை வழங்க உள்ளது. இது ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும் என ஆதார் அமைப்பு (UIDAI ) தெரிவித்துள்ளது. 


மத்திய அரசின் இந்த திட்டத்தை விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.  

இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது : ‘மத்திய அரசின் கட்டாயத்தின் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் தகவல்களை பல சேவை நிறுவனங்களுடன் பகிர்ந்து விட்டனர். இனி புதிய பாதுகாப்பு அடுக்கை அறிமுகப்படுத்துவது என்பது, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதை போன்றதாகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close