மோடியின் ஆடைக்கு எவ்வளவு செலவு? பிரதமர் அலுவலகம் விளக்கம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Jan, 2018 09:33 am

பிரதமர் மோடி அணியும் ஆடை பற்றி எப்போதுமே சர்ச்சைதான். அவர் விதவிதமான ஆடை அணிவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரது விலை உயர்ந்த கோட் தொடர்பாக தேர்தல் பிரசாரம் கூட செய்தன. இந்தநிலையில், பிரதமர் ஆனதில் இருந்து இதுவரை அவரது ஆடைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேரடியாக பிரதமர் மோடி பற்றி கேள்வி எழுப்பாமல், இதுவரை இருந்த பிரதமர்கள் உடுத்திய ஆடைக்கான கணக்கை கேட்டு மனு அளித்திருந்தார் சமூக ஆர்வலர் ரோஹித் சபர்வால். இதற்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.


இதுகுறித்து சபர்வால் கூறுகையில், இதுவரை இருந்த பிரதமர்களுக்களின் ஆடைக்காக செலவிட்ட தொகை எவ்வளவு, மோடியின் ஆடைக்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு, பிரதமர்கள் அவர்கள் உடைக்கு அவர்களாகவே செலவு செய்துகொண்டனர். எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது அவர்கள் தனிப்பட்ட விவரம். அது பற்றி பிரதமர் அலுவலகத்தில் தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

விலை உயர்ந்த ஆடை அணிகிறார், விதவிதமாக அரசு பணத்தில் ஆடை மாற்றுகிறார் என்று இதுவரை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், பிரதமர் அலுவலகத்தின் பதில் மூலம், மோடி தன்னுடைய சொந்த செலவில்தான் ஆடை வாங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close