மாயமான பிரவீன் தொகாடியா! கொந்தளிக்கும் வி.எச்.பி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 15 Jan, 2018 08:52 pm

விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவை இன்று காலை முதல் காணவில்லை. அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

ஒரு வழக்குத் தொடர்பாக அகமதாபாத் போலீசார் பிரவீன் தொகாடியாவுக்குச் சம்மன் கொடுக்க வந்தனர். ஆனால், அவரைக் காணவில்லை என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் எங்கிருக்கிறார் என்று போலீசார் தேடி வருகின்றனர். பிரவீன் தொகாடியா காணாமல் போன தகவல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்குத் தெரியவரவே அவர்களும் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரைக் கண்டுபிடிக்கக் குஜராத் போலீஸ் நான்கு தனிப்படைகளை அமைத்துள்ளது. 

இதற்கிடையே பிரவீன் தொகாடியாவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து ரகசியமாக வைத்துள்ளனர் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதை ராஜஸ்தான் போலீஸ் மறுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், குஜராத் அரசைத் தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் 10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு தொடர்பாக அகமதாபாத் விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் இருந்து பிரவீன் தொகாடியாவை கைது செய்து சென்றனர்" என்றார். 

பிரவீன் தொகாடியாவை காணவில்லை என்ற செய்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close