தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்... வி.எச்.பி உத்தரவு!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 16 Jan, 2018 12:00 am

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்து சென்றதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இதை ராஜஸ்தான் போலீஸ் மறுத்துள்ளது. இதனால், பிரவீன் தொகாடியாவை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளது குஜராத் போலீஸ்.

இதற்கிடையே குஜராத் போலீசார்தான் ராஜஸ்தான் போலீசார் தொகாடியாவை கைது செய்ய உதவினர் என்று கூறி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், பல இடங்களில் தொண்டர்கள் போராடும் மனநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரவீன் தொகாடியாவை காணவில்லை என்ற செய்தி கேட்டதும் நாடு முழுவதும் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்காங்க அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வி.எச்.பி பொதுச் செயலாளர் சாம்பத் ராய் கூறுகையில், "பிரவீன்பாய் தொகாடியாக காணவில்லை என்ற செய்தி கேட்டு அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் கவலை அடைந்துள்ளனர். குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸ் அவரை கைது செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து தொண்டர்கள் கோபத்தில் உள்ளன. இருப்பினும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வதந்திகளுக்கு செவி கொடுக்க வேண்டாம். இதனால், நிலைமை மோசமடையக் கூடும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close