மாயமான பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மீட்பு!

  Sujatha   | Last Modified : 16 Jan, 2018 06:30 am


காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவா் பிரவீன் தொகாடியா, சுயநினைவற்ற நிலையில் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருப்பவர் பிரவீன் தொகாடியா. 1996ம் ஆண்டு நடந்த ஒரு  கொலை வழக்கில்,  தொகாடியாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறி, சமீபத்தில் தொகாடியாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்வதற்காக ராஜஸ்தான் காவல்துறையினரும், குஜராத் காவல்துறையினரும் அவரது வீட்டிற்க்கும், அலுவலகத்திற்கு சென்றனா்.  ஆனால் அவா் அங்கு இல்லை. இந்நிலையில் அவரை குஜராத் காவல்துறையினா் கைது செய்து விட்டதாக வதந்தி பரவத் தொடங்கியது.

ஆனால் காணாமல் போன பிரவீன் தொகாடியாவை கண்டுபிடிக்க 4 தனிப்படைகளை குஜராத் போலீசார் அமைத்தனர். இந்நிலையில் சுயநினைவற்ற நிலையில் பிரவீன் தெகாடியாவை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர், தற்போது அவர்  சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மருத்துவமனை உள்ள பகுதி ஷாகிபாக் என்கிற இசுலாமியர்கள் மிகுந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

62 வயதான தொகாடியா குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு மற்றும் இரத்தச் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக சுயநினைவிழந்ததாக சொல்லப்படுகிறது. அவர் உடல்நிலை சீராகும் வரை, அவரிடமிருந்து எந்தத் தகவல்களையும் பெற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொகாடியா, ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close