என்கவுண்டரில் கொல்ல முயற்சி: பிரவீன் தொகாடியா பரபரப்பு புகார்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 16 Jan, 2018 02:00 pm

தன்னை என்கவுண்டரில் கொலை செய்ய ராஜஸ்தான் போலீஸ் முயற்சிப்பதாக பிரவீன் தொகாடியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்று காணவில்லை என்று தேடப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று சுயநினைவு அற்றநிலையில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. சர்க்கரை நோயாளியான பிரவீன் தொகாடியா, ஒரு நாள் முழுக்க போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்ததால் மொபைல் போனை சுவிட் ஆஃப் செய்து வைத்திருந்தார். மேலும் சரியாக சாப்பிடவில்லை. இதனால், சர்க்கரை அளவு குறைந்து சுயநினைவு இழந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"10 ஆண்டுக்கும் பழமையான முடிந்துபோன வழக்கை வைத்து என்னை குறிவைத்துள்ளனர். என்னுடைய குரலை அடக்க முயற்சிக்கின்றனர். ராஜஸ்தான் போலீஸ் என்னை கைது செய்ய வந்தது. என்னை கைது சென்று அழைத்து சென்று என்கவுண்டரில் கொலை செய்ய ராஜஸ்தான் போலீஸ் திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒருவர் தெரிவித்தார்" என்று சொல்லும்போதே பிரவீன் தொகாடியா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


பின்னர் பேசிய அவர், "ராஜஸ்தானில் என் மீது எந்த வழக்கும் இல்லை. அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாகவும் பசு பாதுகாப்பு தொடர்பாகவும் என்னுடைய குரல் ஒலிக்காமல் இருக்க முயற்சிக்கின்றனர். என்னுடைய குரலை அமைதிபடுத்திவிட முடியாது. தொடர்ந்து இந்துக்களுக்காகவும் அவர்கள் நலனுக்காகவும் செயல்படுவேன். இந்த விவகாரத்தில் அனைத்து இந்து அமைப்புக்களும் ஒன்று சேர வேண்டும்" என்றார்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பா.ஜ.க தான் ஆட்சி செய்கிறது. மத்தியிலும் பா.ஜ.க தான் இருக்கிறது. இந்த சூழலில் பிரவீன் தொகாடியாவை பா.ஜ.க-வை குற்றம்சாட்டுகிறாரா என்று வி.எச்.பி தொண்டர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close