பிப்ரவரியில் மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 18 Jan, 2018 01:17 pm

மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் முகுல் சங்மா தலைமையிலான அரசானது நடக்கிறது. திரிபுரா மாநிலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. நாகாலாந்தில் டி.ஆர்.ஜிலியாங் தலைமையில் நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில் மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள சட்டப்பேரவையின் பதவிக்காலம் மார்ச் மாதத்தில் முடிய உள்ளது. இதை அடுத்து, இந்த மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திரிபுராவுக்கு பிப்ரவரி 18-ம் தேதியும் மேகாலயா மற்றும் நாகாலாந்து பிப்ரவரி 27ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 3ம் தேதி நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மூன்று மாநிலங்களிலும் 60 தொகுதிகள் உள்ளன. 

திரிபுரா மாநில தேர்தலுக்கு ஜனவரி 24ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 31ம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 3ம் தேதி ஆகும்.

அதேபோல் மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி, மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 12ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close