மோடி, அமித்ஷா இந்துக்களே அல்ல- பிரகாஷ்ராஜ் சரவெடி!

  முத்துமாரி   | Last Modified : 18 Jan, 2018 07:32 pm


'பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் இந்துக்களே அல்ல' என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். கௌரி லங்கேஷ் கொலை, மாட்டிறைச்சி தடை, பசுப்பாதுகாவலர்கள் தாக்குதல் என பெரும்பாலாக பா.ஜ.க சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விமர்சித்து வருகிறார். 

சமீபத்தில் கர்நாடக மாநிலம் சிர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை விமர்சித்து பேசினார். அதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரகாஷ்ராஜ் நின்று பேசிய மேடையை பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு பிரகாஷ் ராஜும், 'நான் செல்லும் இடமெல்லாம் இதுபோன்று சுத்தம் செய்வீர்களா?" என கேட்டார். இந்த பிரச்னையே முடிவுக்கு வராத சமயத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.  

இந்த நிலையில்  இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "இந்துக்கள் யார் என்பதை பா.ஜ.க முடிவு செய்ய முடியாது. பிரதமர் மோடியும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவும் இந்துக்களே கிடையாது. நான் பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும், ஹெக்டேவுக்கும் எதிரானவனே தவிர இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல" என பேசியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close