ஆனந்தி பென் கவர்னராக நியமனம்

  Sujatha   | Last Modified : 20 Jan, 2018 01:17 pm


குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலை மத்திய பிரதேச ஆளுநராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்ற ஆனந்திபென் பட்டேலை மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.  76 வயதான ஆனந்தி பென் பட்டேல் 1987ம் ஆண்டு முதல் பாஜக உறுப்பினராக இருந்துவருகிறார். குஜராத் முதல்வராக இருந்த மோடி, இந்திய பிரதமராக பதவியேற்றப்பின், குஜராத் மாநிலத்தின் முதல்வரானவர்  ஆனந்திபென் பட்டேல்.

தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ஓம் பிரகாஷ் கோலியின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த பதவிக்கு ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாஜகவினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close