20 டெல்லி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார் ஜனாதிபதி

  SRK   | Last Modified : 21 Jan, 2018 06:20 pm


அரசு பதவிகளை வைத்து லாபம் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட டெல்லி மாநிலத்தின் 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், அந்த பரிந்துரையை ஏற்று, 20 பேரையும் இன்று நீக்கி உத்தரவிட்டார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடுக்கும் என கூறப்படுகிறது.

2015-16ம் ஆண்டில், நாடாளுமன்ற செயலாளர் பதவி வகித்து வந்த 20 எம்.எல்.ஏ.க்கள், லாபம் தரும் பதவிகளில் இருந்ததற்க்காக நீக்கப்பட்டுள்ளார். இவர்களை 3 வாரங்களுக்கு முன்னதாகவே நீக்க பரிந்துரை செய்திருக்க வேண்டும் என்றும், அதை செய்யாமல், அந்த எம்.எல்.ஏ.க்களை ராஜ்ய சபா தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதித்ததாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், தேர்தல் கமிஷன், தனித்துவமாக இந்த விசாரணையை நடத்தியதாக பாரதிய ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close