மோடி, 'தான் பிரதமர்' என்ற 'ஈகோ'வில் இருக்கிறார்: அன்னா ஹசாரே குற்றசாட்டு

  முத்துமாரி   | Last Modified : 22 Jan, 2018 02:09 pm


பிரதமர் மோடி, 'தான் பிரதமர்' என்ற 'ஈகோ'வில் இருக்கிறார் என காந்தியவாதி அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். 

பல்வேறு சமூக நல பிரச்னைகளுக்கு எதிராக, முக்கியமாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, நேற்று மகாராஷ்டிராவில் சாங்கிலி மாவட்டம் ஆத்பாடி பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  

அங்கு பேசிய அவர், "லோக்பால் நடைமுறை, லோக்ஆயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு பென்ஷன், விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை பிரதமர் ஒரு கடிதத்திற்கு கூட பதில் அனுப்பவில்லை. அவர், 'தான் நாட்டின் பிரதமர்' என்ற 'ஈகோ' வில் இருக்கிறார். 

என்னுடைய பேரணி, பொதுக்கூட்டம் வாயிலாக மக்களின் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே கிடையாது. ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது கிடைத்த பொதுமக்களின் மகத்தான ஆதரவு, அடுத்து மார்ச் 23ம் தேதி விவசாயிகளுக்காக நடக்க இருக்கும் போராட்டத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close