பெண்குழந்தை தினத்தை முன்னிட்டு மம்தா வாழ்த்து

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 24 Jan, 2018 09:01 pm

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி அனைவருக்கும் அவரது வாழ்த்தை ட்விட்டரில் கூறியிருக்கிறார். அதில், "நாட்டில் பெண் குழந்தைகளின் முன்னேற்றதுக்கு முன்னோடியாக திகழ்கிறது கன்யாஶ்ரீ  என்கிற திட்டம். இதனை துவங்கிய நமது மாநிலத்துக்கு அந்த திட்டத்தால் பெருமை கிட்டியிருக்கிறது" என கூறினார்.

கன்யா ஶ்ரீ திட்டத்தில் பயன்பெறுகிற பெண் குழந்தைகள், 18 வயது வரைக்கும் பள்ளியில் இருந்து நிற்காமல் தொடர்ந்து படிக்க வழிவகை செய்கிறது. படிக்கும் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு ஊக்க தொகையும், அவர்களுக்கு 18 வயது நிரம்பியதும் ஊக்கத்தொகையாக ரூ 25 ஆயிரமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close