குடியரசு தினம்: இந்தியா வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை சந்தித்து பேசினார் மோடி

  Sujatha   | Last Modified : 25 Jan, 2018 06:34 am


இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார்.

நாடுமுழுவதும் நாளை குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி, மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றுவார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.  

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அள்வு தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 

அதன் முறையே இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை பிரதமர் மோடி இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.