குடியரசு தின அணிவகுப்பில் ராகுலுக்கு 4ம் வரிசை; காங்கிரஸ் அதிருப்தி

  முத்துமாரி   | Last Modified : 25 Jan, 2018 06:32 pm


குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின அணிவகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் முக்கிய தலைவர்களுக்கான இடஒதுக்கீடு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.   

அதில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு முதல் வரிசையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 4ம் வரிசையிலும் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு முதல் வரிசையில்தான் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆசியான் நாட்டு தலைவர்கள் 10 பேர், குடியரசு தின அணி வகுப்பை பார்வையிட சிறப்பு விருந்தினர்களாக வருகின்றனர். இதனால், முதல் வரிசையில் இடம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,  "நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகவும் மோசமான செயல். அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் உத்தரவு இன்றி, அதிகாரிகள் இப்படி செய்திருக்கமாட்டார்கள் " என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close