ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார்

  Sujatha   | Last Modified : 26 Jan, 2018 10:33 am


குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவு தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 

அதன் முறையே இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கவுடா ஆகியோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.    

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close