மேகாலயா, திரிபுரா தேர்தல்; வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

  முத்துமாரி   | Last Modified : 27 Jan, 2018 11:14 pm


மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியின் முகுல் சங்மா தலைமையிலும், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இந்த மாநிலங்களுக்கு சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.  

அதன்படி, திரிபுராவுக்கு பிப்ரவரி 18ம் தேதியும் மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 3ம் தேதி நடைபெறும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேகாலயாவில் 57 வேட்பாளர்களின் பெயர்களும், திரிபுராவில் 56 வேட்பாளர்களின் பெயர்களும் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

மேகலயாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 30ம் தேதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் எனவும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close