ஆதார் கார்டு இல்லை; மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற பெண்மணி

  முத்துமாரி   | Last Modified : 30 Jan, 2018 12:10 pm


உ.பியில் ஆதார் கார்டு இல்லாததால் மருத்துவமனை நுழைவாயிலில் பெண்மணி ஒருவர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியில் ஷாகஞ்ச் எனும் இடத்தில் பெண்மணி ஒருவர் பிரவசத்திற்காக தனது உறவினர்களுடன் மருத்துவமனையில் அனுமதி பெற சென்றுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் ஆதார் கார்டு மற்றும் வங்கிக்கணக்கு ஆதாரங்களை கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். 

மருத்துவமனை வாசல் அருகே வரும் போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனை நுழைவாயிலில் அவர் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகும் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனை ஊழியர்களை கண்டித்து கோஷம் எழுப்பியதும், அந்த பெண்மணியை மருத்துவமனைக்குள் வர அனுமதி அளித்தனர். 

ஆனால் மருத்துவமனைக் குழு இதை மறுத்துள்ளது. "அந்த பெண்மணியை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் அவர் செல்லும் வழியிலே பிரசவ வலி வந்து குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த செய்தி அறிந்ததுமே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close