பட்ஜெட்டில் அதிருப்தி: பா.ஜ.க கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்?

  முத்துமாரி   | Last Modified : 02 Feb, 2018 01:20 pm


பா.ஜ.க. உடனான கூட்டணியைக் கைவிடுவது குறித்து நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. 

2018-19ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன எனவும் கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதால் பெங்களூரு புறநகர் ரயில் சேவைக்காக ரூ,17,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. 

பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளார் என தற்போது வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. உடனான கூட்டணியைக் கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும் சூழ்நிலை வரலாம். 

இதற்கு முன்னதாக, 'எங்கள் கட்சியினரை பா.ஜ.கவினர் தொடர்ந்து விமர்சனம் செய்தால் நாங்கள் எங்கள் வழியைப் பார்த்துக் கொள்கிறோம்' என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close