பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுக்கும் மணி அடிக்க தொடங்கி விட்டது: மேற்கு வங்க முதல்வர்

  முத்துமாரி   | Last Modified : 03 Feb, 2018 07:11 am


பா.ஜ.வுக்கு ஆட்சியில் இருந்து விடைகொடுப்பதற்கான மணி அடிக்க தொடங்கி விட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் தொகுதிகளில் கடந்த 29ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தானில்  மக்களவைத் தொகுதிகளான அஜ்மீர், அல்வர் மற்றும் சட்டப்பேரவை தொகுதியான மண்டல்கர் என மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் தனது வெற்றியை பதித்தது.

அதேபோல் மேற்கு வங்க மாநிலம் சட்டப்பேரவை தொகுதியான உல்பேரியா மற்றும் மக்களவை தொகுதியான நபோராவில் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனால் இந்த 5 தொகுதிகளிலும் மத்தியில் இருக்கும் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது. 

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹவுராவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் கலந்த கொண்டார். அவர் பேசுகையில், "மத்தியில் ஆளும் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்கள் நலனுக்கு எதிரான பட்ஜெட்.

மேலும், நம்பிக்கையற்ற ஒரு எதிர்மறையான பட்ஜெட். இவர்கள் ஆட்சி செய்வதற்கே தகுதி இல்லை என்று நான் நினைக்கிறன். பா.ஜ.வுக்கு ஆட்சியில் இருந்து விடைகொடுப்பதற்கான மணி அடிக்க தொடங்கி விட்டது. 2019  நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க காணாமல் போகும். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தன்னுடைய அடையாளத்தை இழந்து வருகிறது" என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close