மன உளைச்சலை போக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் பிரதமர் மோடி!

  முத்துமாரி   | Last Modified : 03 Feb, 2018 12:13 pm


தேர்வு சமயங்களில் மன உளைச்சலில் இருந்து விடுபட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க இருக்கிறார் பிரதமர் மோடி. 

பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது. பிரதமர் ஆன பிறகு மோடி வெளியிடும் முதல் புத்தகம் இதுவாகும். இதில், மாணவர்கள் தேர்வின் போது மன உளைச்சல், பதற்றத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனையடுத்து, இந்த புத்தகத்தில் உள்ள அம்சங்களை மாணவர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். டெல்லியில் உள்ள தல்கோட்டரா ஸ்டேடியத்தில் வருகிற 16ம் தேதி இந்த நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு, கலந்துகொள்ளும் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். மேலும் மற்ற பகுதிகளில் உள்ள மாணவர்களுடனும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவோ அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக பிரதமர் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close