பா.ஜ - தெலுங்கு தேசம் முறிவு இப்போது இல்லை

  SRK   | Last Modified : 04 Feb, 2018 06:03 pm


தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கூட்டணியில் எந்த முறிவும் கிடையாது என தெரிய வந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர பிரதேசத்துக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாததால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தெலுங்கு தேசம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய பின், அந்த முடிவை தற்போது ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆந்திராவுக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை என்றால், தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து நிச்சயம் விலகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close