கொலை, ஊழல்; கர்நாடக அரசை பிரித்தெடுத்த பிரதமர் மோடி

  SRK   | Last Modified : 05 Feb, 2018 02:36 pm


பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவின் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து நேற்றைய மாநாட்டில் பேசினார். பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்ட் பகுதியில் நடந்த பெரிய மாநாட்டில் பேசியபோது, "10% கமிஷன் பெறும் அரசு இது" என்றும், தொழில் செய்ய எளிதான அரசுக்கு மாறாக கொலை செய்ய எளிதான அரசாக கர்நாடக அரசு திகழ்வதாகவும் விமர்சித்தார். 

"இது 10% அரசு. அப்படியென்றால், ஒவ்வொரு மக்கள் நலத்திட்டத்தில் இருந்தும் அவ்வளவை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்" என்றார் பிரதமர். சமீபத்தில் பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பை சேர்ந்த ஒரு தொண்டர் கர்நாடகாவில் கொலை செய்யப்பட்டார். அதை குறிப்பிட்டு, "இது தொழில் செய்ய எளிதான அரசு இல்லை. இது எளிதாக கொலை செய்வதை ஆதரிக்கும் அரசு. அரசியல் கொள்கைகளுக்காக பலர் இங்கு கொல்லப்படுகிறார்கள்" என்றும் பேசினார்.

முன்னதாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவும், இதே போல அங்கு பிரச்சாரம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் அரசின் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து பா.ஜ-வின் தேர்தல் பரப்புரைகள் அமையும் என எதிர்பார்க்கலாம். 

வரும் ஏப்ரல் மாதம், கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close