சவூதி அரேபியா செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

  முத்துமாரி   | Last Modified : 05 Feb, 2018 11:34 am


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சவூதி அரேபியா செல்ல இருக்கிறார்.

சவூதி அரேபியாவில் பிப்ரவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை வளைகுடா நாடுகள் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதனையடுத்து இந்த விழாவில் கலந்துகொள்ள இந்தியாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதில் கலந்துகொள்ள இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது சவூதி பிரதமரையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், "சவூதி அரேபியா 30 லட்சம் இந்திய மக்களின் வாழ்விடமாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு வளர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா பங்கேற்பதன் மூலம் மேலும் இரு நாடுகளுக்கு இடையே பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்து துறையும் மேம்படுத்த வழிவகுக்கும்" என தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close