செல்ஃபி எடுத்த இளைஞர்... தட்டிவிட்ட அமைச்சர்! வைரலாகும் வீடியோ

  முத்துமாரி   | Last Modified : 05 Feb, 2018 05:09 pm


கர்நாடகாவில் செல்ஃபி எடுக்க முற்பட்ட ஒரு இளைஞரின் செல்போனை அமைச்சர் ஒருவர் அவரது கையில் அடித்து தட்டிவிட்டுள்ளார். இச்சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கர்நாடகா மின்துறை அமைச்சரான டி.கே.சிவகுமார் நேற்று பெல்லாரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த சமயத்தில் கட்சித் தொண்டர்கள் அமைச்சரைச் சுற்றி குழுமியிருக்க, அமைச்சருடன் ஒரு தொண்டர் செல்ஃபி எடுக்க முயற்சித்தார். இதைப்பார்த்த அமைச்சர், தொண்டர் கையில் வைத்திருந்த செல்போனை வேகமாக தட்டி விட்டுள்ளார். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதுகுறித்து அமைச்சர் சிவக்குமார் விளக்கமளிக்கையில். "என்னுடைய அனுமதி இல்லாமல் எவ்வாறு அவர் செல்ஃபி எடுக்கலாம். அதனால் தான் நான் தட்டி விட்டேன். இது ஒரு சாதாரணமான விஷயம்" என தெரிவித்துள்ளார். இதேபோன்று கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, கட்சித் தொண்டர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது, அமைச்சர் அவரை அறைந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close