வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது மேல்: அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு

  முத்துமாரி   | Last Modified : 05 Feb, 2018 05:37 pm


வேலை இல்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இன்று நடந்த நாடாளுமன்ற மாநிலங்களைவை கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா முதல்முறையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், "இந்தியாவை ஒரு காலத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. காங்கிரஸுக்கு அடுத்ததாக இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி புரியும் ஒரே கட்சி பா.ஜ.க. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்  இருக்கிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். 55 வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும். 

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் தான் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு என பல்வேறு நடவடிக்கைகள் பா.ஜ.கவினால் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராகவும் பா.ஜ.க நடவடிக்கைகளை எடுக்கும்.

மேலும், பட்டதாரிகள் பக்கோடா விற்றதில் ஒன்றும் வெட்கப்பட தேவையில்லை. வேலை இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல். இதில் அவமானப்பட வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close