ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேராதவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது

  Sujatha   | Last Modified : 07 Feb, 2018 08:01 pm


'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேராதவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது' என்று ஐதராபாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ராஜா சிங் தெரிவித்துள்ளார். 

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த, பாஜக எம்.எல்.ஏ., ராஜா சிங், நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: ஆர்எஸ்எஸ் என்ற நிறுவனத்தில் இருந்து தான் மோடி, யோகி ஆதித்யநாத்  போன்ற தலைவர்கள் உருவானார்கள். அதனால் அனைவரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக வேண்டும். அப்படி ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேராதவர்கள் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது. மேலும் இந்து மதத்திற்கு எதிராக சில சதி வேலைகள் நடக்கின்றன. இதை எதிர்த்து போராட வேண்டும் என கூறினார். 

எம்எல்ஏ-வின் இந்த பேச்சு சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close