நாட்டை பிளவுப்படுத்தியது காங்கிரஸ் கட்சியே: பிரதமர் மோடி

  முத்துமாரி   | Last Modified : 07 Feb, 2018 07:09 pm


நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ் கட்சியே என பிரதமர் மோடி இன்று மக்களைவையில் காங்கிரஸ்-க்கு எதிராக ஆவேசமாக பேசியுள்ளார். 

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார். காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் மோடி. அவர் பேசுகையில், "காங்கிரஸ் சரியாக பணியாற்றியிருந்தால் பா.ஜ.கவுக்கு இந்த அளவுக்கு சுமை இருந்திருக்காது.

90 முறைக்கு மேல் மாநில அரசாங்கங்களை அகற்றி சட்டத்தை தவறாக பயன்படுத்திய காங்கிரஸ், ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றி காங்கிரஸார் எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம். 


காங்கிரஸ் கட்சியும், நேருவும் ஜனநாயகத்தை கொண்டு வரவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் விதைத்ததை தற்போது அறுவடை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு மக்கள் தற்போது விலைகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கான திட்டங்களை அறிவிப்பதிலும், அதை சரியான நேரத்தில் நிறைவேற்றுவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது. சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் முதல் பிரதமர் ஆகியிருந்தால் காஷ்மீர் முழுவதுமாக நம்முடன் இருந்திருக்கும்" என பேசினார். 

பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "முன்னதாக எதிர்கட்சித் தலைவர் பேசுகையில் நான் அமைதியாக தான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் நான் பேசும்போது எதிர்க்கட்சிகள் தற்போது அமளியில் ஈடுபடுவது வேதனையாக உள்ளது" என தெரிவித்தார்.


மோடியின் இந்த உரைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "நாடாளுமன்ற அவையில் மோடி அரசியல் பேசுகிறார்.  தான் ஒரு பிரதமர் என்பதையே சில சமயங்களில் மோடி மறந்து விடுகிறார். பேசுவதற்கு எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அதை விட்டுவிட்டு காங்கிரஸை குறை கூறுகிறார். ஒரு மணி நேரம் பேசியும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பேசவில்லையே" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close