ராகுல் காந்தி எனக்கும் தலைவர் தான்: சோனியா காந்தி

  முத்துமாரி   | Last Modified : 08 Feb, 2018 11:48 am


காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி எனக்கும் தலைவர் தான், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், "இந்த ஆண்டு முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தல் வர வாய்ப்புள்ளது.

சமீபத்தில் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி மூலமாக காங்கிரஸ்-க்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்பிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் இணைந்து நான் பணியாற்றுவேன். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் கட்சியின் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வேன். பா.ஜ.கவைத் தோற்கடிக்க மற்ற கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயார்" என தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close