2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: சிபிஐ திட்டவட்டம்

  முத்துமாரி   | Last Modified : 08 Feb, 2018 01:57 pm


2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இம்மாத இறுதிக்குள் வழக்கு மேல்முறையீடு செய்யப்படும் என சிபிஐ இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று கருதப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனையடுத்து 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ இம்மாத இறுதிக்குள் மேல் முறையீடு செய்யப்போவதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதில் கண்டிப்பாக தமக்கு வெற்றி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close