பா.ஜ.க.வுக்கு எதிராக பா.ஜ.க: நிர்மலா சீதாராமன் மீது புகார் அளித்த ஸ்வாமி

  Sujatha   | Last Modified : 09 Feb, 2018 06:17 am


ஜம்மு காஷ்மீரில் இராணுவம் மீது புகார் எழுந்துள்ளது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் சுப்பிரமணிய சாமி புகார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 27-ம் தேதி ராணுவ வாகனம் மீது சில இளைஞர்கள் கல்வீசி தாக்கினர். இதனை கட்டுப்படுத்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 அப்பாவிகள் பலியாயாயினர். 9  பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே காஷ்மீர் போலீசார் ராணுவத்தினர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்தனர். இந்நிலையில் ராணுவத்தினர் மீது வழக்கு வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அனுமதி பெற்ற பின்பே ராணுவத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் அமைதி காப்பது ஏன்? இதற்கு அவர் தகுந்த விளக்கம் ஜனாதிபதியிடம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.     

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close