ராகுலின் அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது: அமித் ஷா

  முத்துமாரி   | Last Modified : 09 Feb, 2018 02:00 pm


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் செய்யும் முறை ஜனநாயகத்திற்கு எதிரானது என பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் பா.ஜ.கவின் நாடாளுமன்ற எம்.பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க தேசியத்தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பட்ஜெட் பற்றிய விவாதம், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், கர்நாடக சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 

கூட்டத்தின் போது, அமித் ஷா பேசுகையில், "காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போல் யாராலும் அரசியல் செய்ய முடியாது. அவர் அரசியல் செய்யும் விதம், அவரது கொள்கைகள் மற்றும் எண்ணங்கள் நமது ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்ப காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் கேள்வி கேட்கிறார். அவருக்கான பதில் எப்போதோ கொடுக்கப்பட்டு விட்டது" என தெரிவித்தார்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close