துப்பாக்கிக்கு துப்பாக்கி தான் பதில்: யோகியின் சர்ச்சைக்குரிய பேச்சு

  முத்துமாரி   | Last Modified : 09 Feb, 2018 03:25 pm


துப்பாக்கி மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு அதன் மூலமாகவே பதிலளிக்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் போலீஸ் என்கவுண்டர்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 20, 2017 முதல் ஜனவரி 31, 2018 வரை 1,142 என்கவுண்டர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கடைசி 25 நாட்களில் மட்டும் நடத்தப்பட்ட 60 என்கவுண்டர்களில் 8 பேர் இறந்துள்ளனர். இதனால் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் வரம்புக்கு மீறி, என்கவுண்டர்கள் நடத்தப்படுகிறது என புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து பேசினார். அவர், "இம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. மாநிலத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் துப்பாக்கி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் பாணியில் துப்பாக்கியிலே பதிலளிக்கப்படும். அதிகாரிகள் இவற்றை பார்த்து பயப்பட தேவையில்லை" என பேசினார். இவரது தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close