பாலஸ்தீனம் சென்றார் பிரதமர் மோடி!

  முத்துமாரி   | Last Modified : 10 Feb, 2018 09:40 am


அரசுமுறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுடெல்லியில் இருந்து நேற்று டெல்லி கிளம்பிய அவர் இன்று பாலஸ்தீனத்தை அடைந்தார். இதன்மூலம் இந்தியாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

இன்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ரமுல்லாவை சந்திக்கிறார். இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்லும் மோடி அங்குள்ள தலைவர்களை சந்திக்கிறார். இதற்கிடையே துபாயில் நடைபெறும் ஆறாவது உலக நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்கிறார்,

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close