விரைவில் கர்நாடக தேர்தல்: ஆன்மிகப் பயணம் தொடங்கினார் ராகுல்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 Feb, 2018 11:47 am

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள சூழலில் அம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார் ராகுல் காந்தி.

குஜராத் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் குஜராத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அப்போதே இதற்குப் பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். டெல்லியில், ராகுல் வீட்டுக்கு அருகில் உள்ள எந்த ஒரு கோவிலுக்காக ராகுல் சென்றது உண்டா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், எதற்கும் ராகுல் பதில் அளிக்கவில்லை. 

இந்தநிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், கர்நாடகாவில் உள்ள இந்து கோவில்களுக்கு ராகுல் செல்ல ஆரம்பித்துள்ளார். நேற்று கர்நாடகாவுக்கு வந்த ராகுல், பிரசித்தி பெற்ற ஹூலிசும்மா கோவிலுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார். பின்னர்க் கவி சித்தேஸ்வரா மடத்துக்குச் சென்றார். தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளாராம் ராகுல். இதற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சொகுசு பஸ் கர்நாடகம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

ராகுலின் திடீர் கோவில் தரிசனத்தைப் பா.ஜ.க விமர்சித்துள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது கோவிலுக்குச் சென்ற ராகுல், அதன்பிறகு கோவில் பக்கமே தலைவைக்காதது ஏன்? தற்போது மீண்டும் கர்நாடகாவில் உள்ள கோவில்களுக்குச் செல்ல ஆரம்பித்திருப்பது இந்துக்களின் வாக்குகளைக் கவரத்தான் என்று கர்நாடக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close