ராஜஸ்தான் பா.ஜ.க தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 Feb, 2018 12:29 pm

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவரை மாற்ற வேண்டும் என்று மாவட்ட தலைவர் ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. வசுந்தரா ராஜே முதல்வராக இருக்கிறார். மாநில பா.ஜ.க தலைவராக அசோக் பர்னாமி இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அங்கு அடுத்த ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 

தற்போதைய தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்தால் வெற்றிபெறுவது கடினம் என்று பா.ஜ.க தொண்டர்கள் கருதுகின்றனர். இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோடா மாநில பா.ஜ.க தலைவர் அசோக் சவுதிரி, மாநில தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். தலைமையை மாற்றி அமைத்துத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அவர் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், ஜெய்ப்பூர் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததால், டெல்லி தலைமையின் மீது நம்பிக்கை வைத்துக் கடிதம் எழுதியுள்ளேன். நடந்து முடிந்த இடைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைமை வெறுங்கையுடன் திரும்பியது. தற்போது தோல்வியைச் சந்தித்த தலைமையின் கீழ் பொதுத் தேர்தலை சந்தித்தால், அதிலும் கூட வெறுங்கையுடன்தான் திரும்பி வருவார்கள். 

நம்முடைய தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை. அவர்கள் வாக்காளர்களைச் சரியாகக் கூடச் சந்திக்கவில்லை. பலரும் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். எனவே, கட்சித் தலைமை உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close