உ.பி.யில் போலி என்கவுண்டர்கள்: எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி ஆர்ப்பாட்டம்

  முத்துமாரி   | Last Modified : 13 Feb, 2018 07:02 pm


உ.பி.யில் நடந்து வரும் என்கவுண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில சட்டப்பேரவையின் முன்பாக சமாஜ்வாதி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் போலீஸ் என்கவுண்டர்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 20, 2017 முதல் ஜனவரி 31, 2018 வரை 1,142 என்கவுண்டர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல் வெளியானது. இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை.

மாநிலத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் துப்பாக்கி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் பாணியில் துப்பாக்கியிலே பதிலளிக்கப்படும்" என பேசினார். இவரது பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில், நடத்தப்படும் என்கவுண்டர்களில் பெரும்பாலானவை போலி என்கவுண்டர்கள் என மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்தது. 

இந்நிலையில் உ.பி.யில் நடத்தப்படும் போலி என்கவுண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சமாஜ்வாதி கட்சியினர் அம்மாநில சட்டப்பேரவை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close