திரிபுரா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

  முத்துமாரி   | Last Modified : 18 Feb, 2018 07:28 am


இன்று திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 'சரிலாம்' என்ற தொகுதியில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற மார்ச் 12ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 

மொத்தம் 3,214 மையங்களில் நடக்கும் இந்த வாக்குப்பதிவில் 26 லட்சம் பேர் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது. 

தேர்தல் களத்தில் 23 பெண் வேட்பாளர்கள் உட்பட 292 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் சி.பி.எம்.,57 இடங்களிலும், பா.ஜ.க 51 இடங்களிலும் மற்ற 9 தொகுதிகளை கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி, கட்சி போட்டியிடுகிறது. திரிபுரா தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு சேர்த்து மார்ச் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close