காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக முதல்வர் எதிர்ப்பு!

  முத்துமாரி   | Last Modified : 19 Feb, 2018 03:23 pm


காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்துக்கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இது தமிழகத்திற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், தீர்ப்பு வழங்கிய 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது சிறிது ஆறுதல் அளிக்கிறது. 

ஆனால் இதற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் தற்போது கர்நாடக முதல்வர் பேசி வருகிறார். அவர் கூறுகையில், "காவிரி தீர்ப்பு யாருக்கும் சாதக, பாதகமில்லாமல் வந்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. ஊடகங்கள் தான் தவறான செய்தியை பரப்புகின்றன. என்னுடைய வழக்கறிஞர்களிடம் நான் கலந்துரையாடி விட்டு தன நான் கூறுகிறேன். அவ்வாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் அதற்கு கர்நாடகா ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது" என தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close