குற்றமே இல்லாத மாநிலமாகிறது உ.பி: முதல்வர் யோகி உறுதி

  முத்துமாரி   | Last Modified : 19 Feb, 2018 01:53 pm


உ.பி. குற்றங்கள் அல்லாத ஒரு மாநிலமாக மாற்றப்பட்டு வருகிறது, எனவே உ.பி. இனி பிரச்னைகள் அடங்கிய மாநிலமாக இருக்காது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற 21ம் தேதி முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "ஒரு வருடத்திற்கு முன்பாக உ.பி மாநிலம் ஏழ்மையானதாக இருந்தது. தற்போது அவற்றில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உ.பி மாநிலத்தை ஒரு குற்றமற்ற மாநிலமாக கொண்டு வருவோம் என முன்னதாக கூறினோம். அதன்படி தற்போது உ.பியில் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை முதலில் எச்சரிக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கான தண்டனை கொடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு எதிராக யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தற்போது அரசின் உத்தரவின் பேரில், காவல்துறையின் நடவடிக்கைகளால் குற்றம் குறைந்துள்ளது. உ.பி உண்மையான உத்தர பிரதேச மாநிலமாக மாறி வருகிறது. இனி உ.பி பிரச்னை மாநிலமாக இருக்காது. உத்தரபிரதேசத்தில் சூழ்நிலையை மாற்றி சிறந்த மாநிலமாக உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close