கடைசி ஆயுதம் நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

  SRK   | Last Modified : 20 Feb, 2018 01:16 pm


ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.

ஆந்திர மாநில அரசு சிறப்பு நிதி கோரி வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் அது ஒதுக்கப்படாதது, முதல்வரும், கூட்டணியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது. அதன்பிறகு ஆந்திர மாநிலத்துக்கான நிதி குறித்து ஆலோசித்து வருவதாக நிதித்துறை அமைச்சகம் கூறியது. ஆனால், தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.

நேற்று விஜயவாடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, "இந்த போராட்டத்தில் நம் மாநிலத்தை சேர்ந்த சில கட்சிகள் மத்திய அரசை எதிர்க்க மறுக்கின்றனர். சிலர், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றனர். ராஜினாமா செய்வதால் என்ன பலன். அதன்பின், யார் இவர்களை எதிர்த்து கேள்வி எழுப்ப போகிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது நமது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும். நம்மிடம் அதற்கான ஓட்டுகள் இப்போது இல்லை" என்றார். 

காங்கிரஸ் மற்றும் பா.ஜ காட்சிகள் மீதும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். "மாநிலத்தை இரண்டாக பிரிக்கும்போது காங்கிரஸ் அநீதி இழைத்தது. இப்போது பாரதிய ஜனதா அரசு அநீதி இழைக்கிறது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம். நீதி வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close