ஒடிசா முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்

  Sujatha   | Last Modified : 21 Feb, 2018 06:49 am


ஒடிசா மாநிலம் பிஜேபுர் தொகுதிக்கு வரும் 24-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பிஜூ ஜனதா தள கட்சி வேட்பாளரை ஆதரித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கம்பாரியில் உள்ள பர்பாலி பிளாக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நவீன் பட்நாயக் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது ஷூ வீசப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ஷூ முதல்வரை தாக்காமல் தடுத்தனர். பின்னர் சம்மந்தப்பட்ட இளைஞரை விசாரித்ததில், "பிடிபட்ட அந்த இளைஞர் பத்மாபுர் பகுதியைச் சேர்ந்த கர்திக் மெஹர் என்றும் அவர் சட்டைப்பையில் இருந்து பாஜகவின் கொடி மற்றும் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்"  போலீசார் தெரிவித்துள்ளனர்.  பிஜேபுர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் பாஜக பிரமுகர் ஆத்திரத்தில் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து ஷூ தாக்குதலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close